திருப்பதியில் போலியான தரிசன டிக்கெட் வழங்கிய இடைத்தரகர்கள் 2 பேர் கைது.!

திருப்பதில் சாமி தரிசனத்திற்காக போலியான டிக்கெட்டை தயாரித்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த இரண்டு இடைத்தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-07-21 09:00 GMT

திருப்பதில் சாமி தரிசனத்திற்காக போலியான டிக்கெட்டை தயாரித்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த இரண்டு இடைத்தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 14 பேர் திருப்பதிக்கு வந்துள்ளனர். அப்போது புதுச்சேரியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், சித்தூரை சேர்ந்த வேணுகோபால் என்ற இரண்டு பேர் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். 


மேலும், தரிசன டிக்கெட் ஒன்றுக்கு கூடுதலாக 600 ரூபாய் கொடுக்க வேண்டும் என பக்தர்களிடம் பேசி மொத்தமாக 12,600 ரூபாய் வசூல் செய்துள்ளனர். இதன் பின்னர் தரிசனம் செய்வதற்காக போலியான டிக்கெட்களை மகாராஷ்டிரா பக்தர்களிடம் வழங்கியுள்ளனர். அதனை பெற்றுக்கொண்டு தரிசனத்திற்கு சென்றபோது அவை போலியானது என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகாராஷ்டிரா பக்தர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை தொடர்ந்து இரண்டு இடைத்தரகர்களையும் கைது செய்துள்ளனர்.

Similar News