இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1949ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை நினைவு கூறுகின்ற வகையில் வருடம்தோறும் ஜனவரி 15ம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
Best wishes on the occasion of Army Day, especially to our courageous soldiers, respected veterans and their families. The Indian Army is known for its bravery and professionalism. Words cannot do justice to the invaluable contribution of the Indian Army towards national safety. pic.twitter.com/UwvmbVD1hq
— Narendra Modi (@narendramodi) January 15, 2022
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ராணுவ தினத்தை முன்னிட்டு, நமது துணிச்சலான, மரியாதைக்குரிய வீரர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். இந்திய ராணுவம் எப்போதும் அதன் துணிச்சலுக்கும், நேர்த்திக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. தேசத்திற்காக ராணுவத்தின் பங்களிப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது.
மேலும், இந்திய ராணுவ வீரர்கள் பல்வேறு விதமான நிலப்பரப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இயற்கை பேரழிவுகள் உட்பட பல மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படும்போது தங்களது நாட்டின் குடிமக்களுக்காக அவர்கள் உதவுவதில் முன்னணியாக திகழ்ந்து வருகின்றனர். வெளிநாடுகளிலும் அமைதிக்காக நமது ராணுவத்தினர் பல்வேறு வகையிலான சிறப்பு பணிகளை மேற்கொள்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Source: Twiter
Image Courtesy: Asia Times