"ரீச்சார்ஜ் வேலிடிட்டி" காலத்தை உயர்த்துவது குறித்து 'டிராய்'அதிரடி உத்தரவு!
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், தங்களது ப்ரீபெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க இந்திய தொலை தொடர்பு ஆணையம் (டிராய்) புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்கள் மட்டுமே வவுச்சர்களை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என பல முறை வாடிக்கையாளர்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்திருப்பது உண்டு. ஆனால் நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் விட்டது.
இந்நிலையில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாட்கள் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று டிராய் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இத்திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இது போன்று அமல்படுத்தும் பட்சத்தில் ஆண்டுக்கு 12 முறை மட்டுமே ரீரார்ஜ் செயதால் போதுமானது.
Source,Image Courtesy: Puthiyathalaimurai