PMGKAY திட்டம் - மக்களின் உணவு பாதுகாப்பான உறுதி செய்த மோடி அரசு!
பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் மக்களின் உணவு பாதுகாப்பு உறுதி செய்து இருக்கிறது மத்திய அரசாங்கம்.;
இந்திய உணவுக் கழகத்தில் மாற்றங்கள் விரைவான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன எனவும், இதன் மூலம் இந்த அமைப்பு நாட்டு மக்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு தொடர்ந்து அதிக அளவில் உதவ முடியும் என்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற இந்திய உணவுக் கழகத்தின் 59-வது நிறுவக தின விழாவில் தொடக்க உரை ஆற்றிய அவர், இந்திய உணவுக் கழகம், மத்திய கிடங்குக் கழகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை ஒவ்வொரு வாரமும் கண்காணித்து, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தகவல்களைத் தெரிவிக்குமாறு உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளருக்கு அறிவுறுத்தினார்.
மாற்றங்களுக்கு ஒத்துழைக்காத அல்லது மாற்றங்களைத் தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்திய உணவுக் கழகத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீது நடந்து வரும் விசாரணையைப் பற்றிப் பேசிய அவர், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரும் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று உறுதிபட தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான கொள்கையை இந்திய உணவுக் கழகம் முழுமையாக பின்பற்றும் என்று அவர் கூறினார். ஊழலை வெளிப்படுத்தும் விதமான தகவல்களை வழங்குபவர்களுக்கு வெகுமதி அளிக்கும் நடைமுறையை உருவாக்குமாறு உணவுத் துறைச் செயலாளருக்கு பியூஷ் கோயல் உத்தரவிட்டார்.
ஊழல் நடந்தால் புகார் அளிக்குமாறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர் கேட்டுக் கொண்டார். பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் (PMGKAY) உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்காக, குறிப்பாக கொரோனா காலத்தின்போது, உலகின் மிகப்பெரிய உணவு விநியோகச் சங்கிலி அமைப்பை இந்திய உணவுக் கழகம் மேற்கொண்ட விதத்திற்காக பியூஷ் கோயல் பாராட்டினார். கொரோனா பாதிப்பு காலத்திலும், நாட்டில் யாரும் பசியுடன் உறங்வில்லை என்று அவர் கூறினார். உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரச் சூழலை வலுப்படுத்துதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிற துறைகளில் இந்தியா உலகளாவிய முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News