தென்மாநிலங்களில் உருமாறிய கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

தென்மாநிலங்களில் உருமாறிய கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

Update: 2021-02-20 11:22 GMT

ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியியல் மையம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து மாறுப்பட்ட ஆராய்ச்சிகளை செய்தது. வைரஸ் எப்படி இந்தியாவில் பரவியது போன்றவைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு தற்போது அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஷ்ரா கூறியதாவது: புதிய வகை கொரோனா வைரசுகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி மிகவும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அது போன்று அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரசுகள் இந்தியாவில் குறைந்த அளவிலேயே பரவியுள்ளன.

இவற்றில், அதிக பரவல் விகிதங்களை கொண்ட, நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்ப கூடிய வகைகளான, உருமாறிய இ484கே கொரோனா மற்றும் உருமாறிய என்501ஒய் ஆகிய வைரசுகளும் உள்ளடங்கும். அது போன்ற வைரசை கண்டறியாமல் விட்டதும் இந்தியாவில் குறைந்த பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது. இது போன்ற வைரசுகளும், புதுய வகை வைரசுகளின் ஜீனோம்களின் தொடர்ச்சியை வரிசைப்படுத்தி அடையாளம் காண வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், தென்மாநிலங்களில் என்440கே என்ற வைரசானது அதிகமாக பரவி வருகின்றன என்பதற்கான சான்றுகள் வெளி வந்துள்ளது. எனவே அவற்றின் பரவல் தொடர்பாக கண்காணிப்பு அவசியமாகிறது. எனவே நாடு முழுவதும் அடுத்த பேரிடர் வராமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News