திருவனந்தபுரத்தில் விமான சேவைகள் ரத்து.. 8 மணி நேரம் செயல்படாது.!

திருவனந்தபுரத்தில் விமான சேவைகள் ரத்து.. 8 மணி நேரம் செயல்படாது.!

Update: 2020-12-04 11:10 GMT

புரெவி புயல் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகர்ந்து கேரளாவை நோக்கி செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் புயல் எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. புயல் காரணமாக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. காற்றும் பலமாக வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இன்று காலை 10 மணி முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மாலை 6 மணி வரை விமான நிலையம் மூடப்படுகிறது. அவசர தேவைகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் 25ம் நாள் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 21 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மழை அதிகமாக பெய்தபோது தரையிறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அதே போன்று ஏதாவது விபத்து நேரிடலாம் என்பதால் முன்கூட்டியே விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திருப்பி விடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News