சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பிரதமர் தொடங்கி வைத்த இரண்டு அசத்தல் திட்டங்கள்
பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.அவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தொடங்கி வைத்த திட்டங்கள் பற்றி காண்போம்.
கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை புதுப்பிக்கும் நடவடிக்கையாக பிரதமர் 'அம்ரித் தரோஹர்' மற்றும் 'மிஷ்டி' என்ற இரண்டு திட்டங்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 'அம்ரித் தரோஹர்' திட்டம் ராம்சர் தளங்களின் பாதுகாப்பை பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் உறுதி செய்ய ராம்சர் தளங்களை சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களாகவும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பசுமை வேலைவாய்ப்புகளை வழங்கவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர் சமூகங்களின் உதவியுடன் நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சி அடையவும் ஒதுக்கப்பட்டது.
'மிஷ்டி' திட்டம் நாட்டில் உள்ள சதுப்பு நில சுற்றுச்சூழல் அமைப்பை புதுப்பிக்கவும் பாதுகாக்கவும் 2023 - 24 நிதி ஆண்டில் தொடங்கி ஐந்தாண்டுகளில் 11 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் ஏறக்குறைய 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சதுப்பு நிலங்களின் வளர்ச்சிக்கான சாத்தியமான பகுதியை விரிவாக ஆராய்வது உள்ளிட்ட அம்சங்களை செயல்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. இந்த திட்ட செலவில் 80 சதவீதத்தை மத்திய அரசும் 20 சதவீதத்தை மாநில அரசுகளும் அளிக்கின்றனர்.
SOURCE :DAILY THANTHI