NEET, JEE, CUET தேர்வுகள் இணைக்கப்படுமா? - UGC தலைவரின் பதில்!
நீட், ஜே.இ.இ, க்யூட் தேர்வுகள் குறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் பதில் ஒன்று அளித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்களையும் சேர்வதற்காக க்யூட் நுழைவு தேர்வு இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் ஆகியுள்ளது. இந்த தேர்வு மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு, ஐ.ஐ.டியில் சேர்வதற்கான JEE தேர்வு உடனும் இணைக்கப்படும் என்று பல்கலைக்கழக மானிய குழு சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்த மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரசாந்த் அவர்கள், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தேர்வு இணைக்கும் திட்டம் தற்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று டெல்லியின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் இது குறித்து கூறுகையில், மூன்று தேர்வுகளையும் இணைப்பது ஒரு யோசனை மட்டுமே. சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் விரிவான ஆலோசனை இன்னும் நடத்தப்படவில்லை. முறைப்படி எந்த பொருள் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாணவர்கள் மீது திடீரென எதையும் பிரிக்க மாட்டோம். முடிவு எடுத்தால் கூட தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அவர்களுக்கு போதிய அவகாசம் அளிப்பது அவசியம். எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதை அமல்படுத்த வாய்ப்பில்லை பகுதி ஆலோசனை மற்றும் கருத்து கேட்பதற்கு பிறகுதான் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News