இந்திய வெளியுறவுத்துறை சாதனை: 240 இந்தியர்களுடன் டெல்லிக்கு வரும் 3வது விமானம்!
நேட்டோவில் இணைய உள்ள உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் அங்கு கடந்த 4 நாட்களாக போர் உச்சத்திற்கு சென்றுள்ளது. அங்கு வசிக்கும் பிற நாட்டினர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தியா தற்போது உக்ரைனில் மாட்டியிருக்கும் சொந்த நாட்டு மக்களை எப்படியாவது மீட்டு வரவேண்டும் என்று இரவு, பகலாக பணியாற்றி வருகிறது. அது மட்டுமின்றி உக்ரைனில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அதில் பெரும்பாலானோர்கள் மாணவர்களே என கூறப்படுகிறது.
ஆனால் உக்ரைனுக்கு நேரடி விமான சேவை இல்லை. அங்கு வான்வெளியை மூடிவிட்டதால் சாலை மார்க்கமாக அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து அங்கு இருந்து விமானம் மூலமாக மீட்பது என்று இந்திய அரசு முடிவு செய்தது. அதற்கான பணிகளில் வெளியுறவுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
Third flight of #OperationGanga with 240 Indian nationals has taken off from Budapest for Delhi.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 26, 2022
Köszönöm szépen FM Peter Szijjártó. pic.twitter.com/22EHK3RK3V
அதன்படி ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். அது போன்று நேற்று பிற்பகல் சுமார் 1.55 மணியளவில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அதே போன்று புதாபெஸ்டுக்கு நேற்று மேலும் 2 விமானங்கள் சென்றது. அங்கு இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக அதிகாரிகள் கூறினர். அதே போன்று மற்றொரு விமானத்தில் 250 இந்தியர்களுடன் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. அவர்களை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்றார்.