ஜம்முவில் ஐ.ஐ.டி.யின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
ஜம்முவில் உள்ள ஐஐடியில் புதிய வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதன்முதலாக அம்மாநிலத்திற்கு மூன்று நாட்கள் பயணமாக அங்கு சென்றார். அங்கு அரசு நலத்திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் பல்வேறு விழாக்களில் அவர் கலந்து கொள்கிறார்.

அந்த வகையில் இன்று ஜம்முவில் உள்ள ஜம்மு ஐ.ஐ.டி.யில் புதிய வளாகத்தை திறந்து வைத்தார். அதன்பின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் பின்னர் பாஜக சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு, எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளிமாநில மக்கள் மீது பயங்கரவாதிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தும் சம்பவத்தால் தற்போது மத்திய அமைச்சர் செல்லும் வழி முழுவதும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Source, Image Courtesy: ANI