உதய்பூர் டைலர் படுகொலையுடன் ஒற்றுமை அமராவதி கொலை வழக்கு: என்.ஐ.ஏ விசாரணைக்கு அதிரடி மாற்றம்!
மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் டைலர் கன்னையா லால் படுகொலைக்கும் தற்போது அமராவதி கொலைக்கும் ஒற்றுமைகள் இருப்பதால், இதில் ஏதேனும் வெளிநாட்டு சதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பா.ஜ.க. செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்லாமியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மத்தியில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவுகள் பெருகி வந்தது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் டைலர் கன்னையா லாலும் சமூக வலைதளங்களில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பினர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய கும்பல் அவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்தது. அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டது இந்துக்கள் மத்தியில் மிப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும், மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த மருநது கடை உரிமையாளர் உமேஷ் கோலே என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அவரையும் இஸ்லாமிய கும்பல் படுகொலை செய்தது. இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த இரண்டு கொலைகளுக்கும் வெளிநாட்டு சதி இருக்கவும், ஒரே நோக்கத்திற்காக இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த விசாரணையை என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் இந்த படுகொலையில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு மர்மங்கள் வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu