சொன்னதை செய்யும் மத்திய அரசு - தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு!

Union Jal Shakti Minister Chairs Regional Conference Of Ministers From 6 States

Update: 2022-03-06 03:15 GMT

ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம். 

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கு நடப்பு நிதி ஆண்டில் ஜல் ஜீவன் இயக்கத்திற்காக ரூ 20,487.58 கோடியும், தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம் திட்டத்திற்காக ரூ 1,355.13 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 15-வது நிதி ஆணையத்தின் கீழ் 6 மாநிலங்களுக்கு ரூ 7498 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு, கர்நாடகா கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுவிடும். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டபோது, மொத்தம் இருந்த 1 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரம் கிராமப்புற வீடுகளில், 21.76 லட்சம் (17%) வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகள் இருந்தது. 30.21 லட்சம் (20.4%) வீடுகளுக்கு திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, தற்போது 51.97 லட்சம் (41%) வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

6 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் இதுவரை 2.25 லட்சம் பள்ளிகள் மற்றும் 2.31 லட்சம் அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆகியவை அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தண்ணீர் இணைப்புகள் இருப்பதை உறுதி செய்துள்ளன.

Similar News