ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வைப்பது நம்முடைய கடமை: வலியுறுத்தும் மத்திய அமைச்சர்!

ராகுல் காந்தி செய்த தவற்றிற்காக அவரை மன்னிப்பு கேட்க வைப்பது நம்முடைய கடமை என்று மத்தியில் அமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.

Update: 2023-03-19 02:05 GMT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய எம்.பியாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர் சமீபத்தில் லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் பேசுகையில், பாரத பிரதமர் மோடி அவர்கள் மீது பல்வேறு தவறான தகவல்களை எடுத்துரைத்தார். மேலும் இந்தியாவைப் பற்றி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.


அவர் கூறிய கருத்து ஒட்டு மொத்த இந்தியாவையும் அவமதிக்கும் செயலாக அவர் அங்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவரும் சட்டம் துரை அமைச்சருமாக கிரண் ரிஜிஜு டெல்லியில் நிபுணர்களுக்கு பேட்டியின் போது கூறுகையில், இந்தியாவிற்கு எதிராக இருப்பவர்கள் பேசுவதை போல் ராகுல் காந்தி தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார். தனது பேச்சுக்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை மன்னிப்பு கேட்ப வைப்பது நம்முடைய கடமை. தனது செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சியை அழிவு பாதைக்கு அவர் எடுத்துச் செல்கிறார். அதில் எங்களுக்கு எந்த விதமான அக்கறையும் இல்லை.


ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் வெளிநாட்டில் அவதூறாக பேச அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்களை ப் போன்றவரால் அதை சகித்துக் கொள்ளவும் முடியாது. தேசத்தை பற்றி எந்த ஒரு விஷயமும் அனைவருக்கும் கவலை அளிக்கவே செய்யும். நாட்டை அவமதிக்கும் வகையில் பொதுமக்கள் கூட நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் எம்.பியாக இருந்து எப்படி இப்படி நடந்து கொண்டார். அதற்காக அவர் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ராகுல் காந்தி லண்டனில் பேசிய அனைத்துமே பொய் என்று அவர் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக தனக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறியது முற்றிலும் பொய்யானது. காரணம் நாட்டில் அதிகமாக பேசக்கூடிய நபர் ராகுல் காந்தி தான். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News