பள்ளிப் பாடத்திட்டத்தில் யோகா - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி அறிவிப்பு
மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து இன்று (ஜூன் 19) முதல் 20ம் தேதி வரை தேசிய யோகா ஒலிம்பியாட்ஐ நடத்துகிறது. இதில் நாடு முழுவதும் 600 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய யோகா ஒலிம்பியாட் வினாடி வினா போட்டியைத் தொடங்கி வைத்தார். இதில் மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் பிரதான், பள்ளி பாடத் திட்டத்தில் யேகாவை சேர்ப்பதற்கு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கும் பரிந்துரைத்துள்ளார். கொரோனா தொற்றில் இருந்து இயல்பு தன்மையை கட்டமைக்கவும், மனித இனத்திற்கு மிகப்பெரிய பேருதவியாக யோகா இருந்தது என்றார். எனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா உதவுகிறது. தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்போது, ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் யோகாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Maalaimalar