25 ஆண்டுகளுக்கு முன்பு மாடலிங் வாழ்க்கை.. மாதவிடாய் பற்றி அப்பயே பேசிய மத்திய அமைச்சர்!
25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மாடலிங் வாழ்க்கையின் போது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பற்றி விளம்பரங்களில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து மத்திய அமைச்சர்.
மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவது 25 ஆண்டுகளுக்கு முன்பு கூச்சமாக கருதப்பட்டது. குறிப்பாக அந்த காலகட்டங்களில் பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய மாதவிடாய் காலங்களில் ஆண்களுக்கு முன்னிலையில் அதைப் பற்றி பேசுவது மிகவும் தவறானது என்றும், பெரும்பாலும் அவர்கள் அத்தகைய நாட்களில் வீட்டிலிருந்து வெளியில் வர மாட்டார்கள். மேலும் துணியை தான் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த ஒரு காலகட்டம் தான் அந்த கால கட்டம். இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாப்கின் விளம்பரத்தின் மூலம் மாதவிடாய் தொடர்பான பொதுவான சமூக கருத்துக்களை உடைத்தார்.
25 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்காக குரல் கொடுத்து இருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. குறிப்பாக அப்பொழுது அவர் கொடுத்த குரல்தான் இன்று அவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக மதிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, மாதவிடாய் எப்படி இயற்கையானது என்பதைப் பற்றி அவர் அதில் பேசினார்.
25 வருட பழமையான கருப்பு-வெள்ளை கிளிப்பை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொண்ட இரானி, சானிட்டரி பேட் விளம்பரங்களில் நடிப்பது, மாடலிங் கனவையே முடிவுக்கு கொண்டு வரவும் கூடும் என்று குறிப்பிட்டார். பெண்களிடம் மற்றும் பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் இவர் இந்த ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News 18