இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது - நிதின் கட்கரி சூசகம்

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-09 05:46 GMT

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது உலக சந்தையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை முன்னிட்டு பலர் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்று வாகனம் வேண்டும் என்பது எதிர்பார்த்து இருந்து வந்த நிலையில் மகராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

மராட்டிய மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பயோ எத்தனாலை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம் என கூறினார்.

மேலும் பேசிய அவர், எத்தனால் மீது எடுக்கப்பட்ட முடிவால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு மிச்சமானது என்றும் கூறினார். பச்சை ஹைட்ரஜன், எத்தனால், சி.என்.ஜி மூலம் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் ஓடும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.


Source - Polimer News

Similar News