இந்தியாவில் கருத்தரிப்பு விகிதம் குறைய வாய்ப்பு! குடும்பக்கட்டுப்பாட்டின் புள்ளி விவரங்களை முன்வைத்த மத்திய அமைச்சர்!
இந்தியாவில் கருத்தரிப்பு விகிதம் குறைய வாய்ப்பு! குடும்பக்கட்டுப்பாட்டின் புள்ளி விவரங்களை முன்வைத்த மத்திய அமைச்சர்!;

இந்தியா போன்ற இளம்வயதினர் அதிகம் வாழும் நாட்டின் உயர் விருப்பங்களை மனதில் கொண்டு, நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். புதுமை சிந்தனை படைப்புகளை ஊக்குவிக்க வேண்டும், கல்வி மற்றும் தொழில் திறன்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கச் செய்ய, தொழில்நுட்ப வசதிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். இவை வெற்றியடைய மக்கள் தொகை விகிதாச்சாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வியான் மற்றும் ஜீ ஊடகத்தின் மக்கள்தொகைக்கு எதிரான கோள் என்ற ஓராண்டு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘மக்கள்தொகைக்கு எதிரான கோள்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வளங்களின் தேவையும் அதிகரிக்கும், மக்கள் தொகை பெருகிவரும் நிலையில், பூமியின் வளங்கள் குறைகின்றன. மக்கள் தொகை பெருக்கம் இந்த கிரகத்தையும், மனித சமூகத்தையும் பல்வேறு வழிகளில் பெரிதும் பாதிக்கின்றது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் ஏற்படும் தாக்கத்தை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கும் மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்”, என்று கூறினார்.
குடும்ப கட்டுப்பாடை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் விரிவான நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், தேசிய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை உலகளவில் முதல் நாடாக இந்தியா கடந்த 1952-ஆம் ஆண்டு கொண்டு வந்ததை நினைவுகூர்ந்தார். “கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இந்தியா மற்றும் மாநிலங்களுக்கான மக்கள் தொகை மதிப்பீடுகள் 2011-2036-ன்படி 2011-15ல் 2.37 ஆக இருந்த மொத்த கருத்தரிப்பு வீதம் 2031-35ல் 1.73 ஆகக் குறையும்”, என்று அவர் தெரிவித்தார்.