'சீனாவை மிஞ்சுவதே நமது இலக்கு'  எனக்கூறும் மத்திய அமைச்சர்.!

'சீனாவை மிஞ்சுவதே நமது இலக்கு'  எனக்கூறும் மத்திய அமைச்சர்.!

Update: 2020-12-14 18:09 GMT

மொபைல் உற்பத்தித் துறையில் சீனாவை விட மிஞ்சுவது  நோக்கமாகக் கொண்டு இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டம் இந்த பிரிவில் உலகளாவிய முக்கியத்துவத்தை நாட்டிற்கு ஈர்க்கிறது என்று தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று தெரிவித்தார்.

PLI திட்டத்தை மற்ற துறைகளுக்கு விரிவுபடுத்துவதோடு, இந்தியாவை மின்னணு பொருட்களின் மையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார்.

"இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இப்போது இந்தியா சீனாவை மிஞ்சி முதலிடம் பெற வேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதை நான் மிக தெளிவாக வரையறுத்து வருகிறேன்" என்று பிக்கி அமைப்பின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பிரசாத் கூறினார். 2017 ஆம் ஆண்டில் இந்தியா, உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாக மாறியது.

எலக்ட்ரானிக்ஸ் 2019 இன் தேசிய கொள்கை 2025 ஆம் ஆண்டில் ரூ.26 லட்சம் கோடிக்கு மேல் மின்னணு உற்பத்தி வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது. அதில் ரூ 13 லட்சம் கோடி மொபைல் போன் பிரிவில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை மாற்று உற்பத்தி இடமாகக் காண்பிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் அந்தஸ்தையும், வியாபாரத்தை எளிதாக்குவதற்கும் PLI  வடிவமைக்கப்பட்டுள்ளது என ரவிசங்கர் பிரசாத் கூறினார். "உலகளாவிய தொழில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து இந்திய நிறுவனங்களை தேசிய அளவில் வளர்க்க உதவும் வகையில் PLI வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

Similar News