'இஷ்ராம்' இணையதளத்தில் பெண்களே அதிகமாக பதிவு செய்துள்ளனர்: மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் கோடிக்கணக்கில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்காக மத்திய அரசு ஆன்லைன் பதிவு முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது.

Update: 2021-10-18 02:17 GMT

நாடு முழுவதும் கோடிக்கணக்கில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்காக மத்திய அரசு ஆன்லைன் பதிவு முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இஷ்ராம்' எனப்படும் இணையதளத்தில் பதிவு செய்யும் இவர்களுக்கு நிரந்தர கணக்கு எண் ஒன்று வழங்கப்படுகிறது. இந்த பதிவு மூலமாக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எளிதாக பெறுவதற்கு முடியும். மேலும் கணக்கு வைத்துள்ள தொழிலாளி ஒருவர் விபத்தின்போது உயிரிழந்தால் ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக அளிக்கப்படும்.

இந்நிலையில், இந்த இணையப்பதிவை இதுவரை 4.09 கோடி தொழிலாளர்கள் முடித்துள்ளனர். இதில் 50.02 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இதில் ஆண்களை விட பெண்ளே அதிகளவு பதிவு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் விவசாயம் மற்றும் கட்டிடத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களே அதிகளவு பதிவு செய்துள்ளனர்.

இதில் மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News