இந்திய அளவில் 3வது இடத்தை பிடித்து அசத்திய தமிழகம்! உலக அளவில் சாதித்த இந்தியா!

இந்திய அளவில் 3வது இடத்தை பிடித்து அசத்திய தமிழகம்! உலக அளவில் சாதித்த இந்தியா!

Update: 2021-01-21 08:07 GMT

நிதி ஆயோக் நிறுவனத்தின், இரண்டாவது புதுமை குறியீட்டு பட்டியலில், தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய புதுமை குறியீடுகளைப் பின்பற்றி, இந்தியாவிலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, புதுமை குறியீட்டுக்கான பட்டியலை, நிதி ஆயோக் வெளியிட்டு வருகிறது.

மின்சார வாகனங்கள், பயோடெக்னாலஜி, நானோ தொழில்நுட்பம், விண்வெளி, மாற்று எரிசக்தி ஆதாரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் கொள்கை தலைமையிலான கண்டுபிடிப்புகளைக் கொண்டுவருவதன் மூலம், தேசிய முயற்சிகளை மேம்படுத்துவதை உறுதி நிதி ஆயோக் அயராது உழைத்து வருகிறது. 

புதுமை கண்டுபிடிப்புகளை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக்குவதற்கான திசையில் முக்கிய நடவடிக்கையாக, நிதி ஆயோக் கடந்த ஆண்டு வெளியிட்ட இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்பு பட்டியல்  பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலகளாவிய தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நிலையை கண்காணிப்பதிலும் மதிப்பீடு செய்வதிலும் ஒரு நிலையான உந்துதலை, உலகளாவிய  புதுமை கண்டுபிடிப்பு பட்டியல்,  நிதி ஆயோக் ஆகியவை வழங்கியுள்ளது.

இதன்படி, இரண்டாவது புதுமை குறியீட்டு பட்டியலில் முதலிடத்தை, கர்நாடகாவும்; இரண்டாவது இடத்தை, மஹாராஷ்டிராவும்; மூன்றாவது இடத்தை, தமிழகமும் பிடித்து உள்ளன.தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் முறையே, நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன.

இதே போல உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலில் இந்தியாவை 4 இடங்கள் முன்னேறி  48வது இடத்தில்  உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO)வைத்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், இது இந்தியாவை மேம்படுத்தும் செய்தியாக வந்துள்ளது.  மேலும் நாட்டின்  வலுவான ஆராய்ச்சி & மேம்பாடு சூழல் அமைப்புக்கு  சான்றாக உள்ளது.

இந்தியா  2015-ம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்தது.  2019-ம் ஆண்டில் 52 வது இடத்தை பிடித்தது.   உலகம் முழுவதும் மிகவும் புதுமையான வளர்ந்த நாடுகளின் அமைப்பில் இருப்பது குறிப்பிடத்தக்க சாதனை. கடந்த 5 ஆண்டுகளாக, இந்தியா தனது கண்டுபிடிப்பு தரவரிசையில் நிலையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளதால், மத்திய மற்றும் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் 2019 -ன் முன்னணி கண்டுபிடிப்பு சாதனை நாடுகளில் ஒன்றாக இந்தியாவை WIPO ஏற்றுக்கொண்டது.

Similar News