முகலாயர்கள் இந்துக் கோவில்களுக்கு மானியம் கொடுத்ததாக பாடங்களில் ஆதாரமற்ற தகவல்கள்.! உண்மை அம்பலம்.!

முகலாயர்கள் இந்துக் கோவில்களுக்கு மானியம் கொடுத்ததாக பாடங்களில் ஆதாரமற்ற தகவல்கள்.! உண்மை அம்பலம்.!

Update: 2021-01-15 07:00 GMT

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஹிந்து கோவில்களை மறுபடியும் எடுத்துக் கட்ட மானியம் வழங்கியதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தனது வரலாற்று பள்ளி பாடப்புத்தகத்தில் கூறியிருந்தது.

 இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று குறித்து ஒருவர் அனுப்பிய RTI வேண்டுகோளுக்கு பதிலளித்த இவ்அமைப்பு, இந்தக் கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

 இதற்கான ஆதாரங்களை தேடுவதற்காக RTI தாக்கல் செய்யப்பட்டது. இந்தியத் துணை கண்டத்தில் நடந்த போர்களின் போது அளிக்கப்பட்ட கோவில்களை புனரமைக்க அவுரங்கசீப் மானியம் வழங்கியதாக அதன் வரலாற்று பாடப்புத்தகத்தில் கூறியிருப்பதை உறுதி செய்ய எந்த தகவலும் இல்லை என்று இப்பொழுது வெளியிட்டுள்ளது. 

இந்த பதில் கடிதம் வெளியான பின்னர் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. ராஜஸ்தானை சேர்ந்த மூத்த IAS மற்றும் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரான சஞ்சய் தீட்சித் இதுகுறித்து கூறுகையில், அனைத்து NCERT வரலாற்று பாடப் புத்தகங்களும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையினால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் எழுதப்பட்டன. முழுமையான இடதுசாரி பிரச்சாரம். இந்த புத்தகங்களுக்கு நெருப்பு வைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும் என்ற வகையில் கருத்து தெரிவித்தார். 

 இந்த சர்ச்சை குறித்து பேசிய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினரும், பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஜாபர் ஜிலானி பல முகலாயத் தலைவர்கள் நன்கொடை அளித்தது வரலாற்று உண்மை என்று கூறினார்.

டைம்ஸ் நவ் சேனலுக்கு பேட்டியளித்த மகளிர் கல்வி வாரியத்தின் இயக்குனர் டாக்டர் கீதா பட் கூறுகையில், வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் சில  விஷயங்களை குறிப்பிட்டால் அதற்கு ஆதாரங்கள் இருக்கவேண்டும் என்று கூறினார்.

 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NCERT புத்தகம், அனைத்து முகலாயப் பேரரசர்களும் இந்து வழிபாட்டுத் தலங்களை பராமரிப்பதற்கு மானியங்களை வழங்கியதாகவும், போரின்போது கோயில்கள் அழிக்கப்பட்ட போதும் பழுது பார்ப்பதற்காக மானியங்கள் பின்னர் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தன. அவுரங்கசீப்பின் காலத்தில் முஸ்லிம் அல்லாத குடிமக்கள் மீது மீண்டும் திணிக்கப்பட்டது என்றும் தெரிவித்தன.

 அவரங்கசீப் ஒரு மத வெறி பிடித்த முசல்மான் என அறியப்பட்டார், மற்றும் அவர் பல இந்துக் கோவில்களை அழிக்க உத்தரவிட்டார் .1669 அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் காசி விசுவநாதர் கோயில் முற்றிலுமாக இடிக்கப்பட்டு அங்கு ஒரு மசூதி எழுதப்பட்டது என்பது வரலாற்று உண்மை.

 இந்நிலையில் இவ்வரலாற்று உண்மைகளைத் முழுவதுமாக வெள்ளையடித்து அவர்கள் கோவில்களுக்கு மானியம் வழங்கினார்கள் என்ற ரீதியில் மாணவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு வருவதை சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்து வருகின்றனர்.

Similar News