உ பி: மாதிரி கிராமங்களாக மாறவுள்ள 100 கிராம பஞ்சாயத்துகள்!

உ பி: மாதிரி கிராமங்களாக மாறவுள்ள 100 கிராம பஞ்சாயத்துகள்!

Update: 2020-12-22 14:26 GMT

 உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கின்றார். அதனைத் தொடர்ந்து தற்போது, கிராமங்களுக்கு ஒரு புதிய மாற்றமாக, 100 கிராம பஞ்சாயத்துகளை மாதிரி கிராமங்களாக மற்ற உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்த கிராமங்களானது தனக்குத் தேவையான அனைத்தும் கொண்டிருப்பது போன்றும் மற்றும் மற்ற கிராம பஞ்சாயத்துகளுக்கு  எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோரக்பூர் மாவட்டத்தில் இருக்கும் 100 கிராம பஞ்சாயத்துகளை  மாதிரி கிராமங்களாக  உருவாக்க மானியங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமூகப் பொறுப்பு(CSR) நிதிகளைப் பயன்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

மறு ஆய்வுக் கூட்டத்தின் போது மாவட்ட அதிகாரிகளுக்கு மாதிரி கிராமங்கள் உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்து முதல்வர் யோகி கூறினார். இந்த மாதிரி கிராமங்களில் குளங்கள், வடிகால்கள், சாலைகள், திறந்தவெளி உடற் பயிற்சிக் கூடங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் நீர் சேகரிப்பதற்கு மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் முதலியவை இருக்கும் என்றும் அவர் கூறினார். 

மேலும் அந்த கிராமங்களில் வடிகால்கள், RO நீர் ஆலைகள், தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், அங்கன்வாடிகள், சுகாதார மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் முதலியவற்றைக் கட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வலியுறுத்தினார். மேலும் இந்த மாதிரி கிராமங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட மஜிஸ்திரேட் விஜயேந்திர பாண்டியன் தெரிவித்தார். 

Similar News