பெண்ணை மதமாற்றம் செய்து திருமணம் செய்யத் துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞன்!

பெண்ணை மதமாற்றம் செய்து திருமணம் செய்யத் துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞன்!

Update: 2021-01-02 18:34 GMT
உத்தரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் குற்றங்களுக்கு எதிராகவும் மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராகவும் சட்டம் கொண்டுவரப் பட்டு அதன் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றனர். தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பரேலியில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை முஸ்லீம் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் வைத்து மதமாற்றச் செய்யக் கட்டாயப்படுத்துவதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் காவல்துறைக்கு அளித்த புகாரில், குற்றம் சாட்டப்பட்ட அப்ரான் கான் தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம் செய்யத் துன்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மறுத்தபோது துப்பாக்கி முனையில் வைத்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினரை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டியுள்ளார். காவல்துறை இவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் லவ் ஜிகாத் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் B.Sc நர்சிங் படித்து வருகிறார். அப்ரார் கான் வழியில் இவரை நிறுத்தித் துன்புறுத்தி வந்துள்ளான். மேலும் மதம் மாறவும் கட்டாயப்படுத்தியுள்ளான். இவர் மறுத்தபோது பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட பெண் மனவுளைச்சலுக்கு ஆளானது மட்டுமல்லாமல் அவரது படிப்பையும் பாதித்தது என்றார்.

இதனை தன் குடும்பத்தினருக்குச் சொன்னால் அவர்கள் தன் படிப்பை நிறுத்திவிடுவர் என்றும் பயந்துள்ளார். அப்ரார் கான் மற்றும் அவரது நண்பர்கள் பெண்ணை ரோட்டில் வைத்து ஸ்கூட்டியிலிருந்து இழுத்துத் துன்புறுத்தியுள்ளனர். தனக்கு நடந்தவற்றைக் கூறியபோது காவல்துறையிடம் கூறியபோது குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று'தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாகக் குற்றவாளி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பரேலி ஆய்வாளர் சுரேந்திர சிங் பச்சாரி கூறினார்.

Similar News