உ பி: மை தாக்குதலின் சில நிமிடத்தில் AAP MLA சோம்நாத் பாரதி கைது!

உ பி: மை தாக்குதலின் சில நிமிடத்தில் AAP MLA சோம்நாத் பாரதி கைது!

Update: 2021-01-12 06:30 GMT

திங்களன்று ஆம் ஆத்மீ கட்சியை(AAP) சேர்ந்த MLA சோம்நாத் பாரதி மீது ராய் பரேலி பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இன்க் எறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் மற்றும் அரசு மருத்துவமனை குறித்தும் தவறான கருத்துக்களைக் கூறியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

வலது சாரி கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் மாளிகை முன்பு குவிந்தனர் மற்றும் அவர்கள் AAP MLA வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதத்தின் போது MLA மீது கூட்டத்தில் இருந்த ஒருவர் இன்க் தெளித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த இன்க் தெளிக்கும் சம்பவமானது கடந்த வாரம் MLA மீடியா முன்னர் மாநிலத்தில் அரசு மருத்துவமனை குறித்து\கூறிய பின்னர் எழுந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி MLA மீது இருதரப்பினரிடையே வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட பல பிரிவின் கீழ் ஜகதீஷ்பூர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இன்க் எறிந்த சம்பவம் தொடர்ந்து, காவல்துறை சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து வழக்கு தொடர்பாக பாரதியைக் கைது செய்தது. மேலும் அவர் கைது நடவடிக்கையின் போது காவல்துறையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் மற்றும் அவர்களுடைய சீருடைகளைக் கழட்டி விடுவதாக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையிடம் முதல்வர் ஆதித்யநாத் குறித்து தவறான கருத்துக்களைக் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். 

MLA கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். "பாரதிக்கு எதிராக ராய் பரேலி காவல்துறை தவறான நடவடிக்கைக்காகவும் மற்றும் காவல்துறையை தங்கள் பணிகளைச் செய்யத் தடுத்தற்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று ராய் பரேலி காவல் கண்காணிப்பாளர் ஷோல்க் குமார் தெரிவித்துள்ளார். IPC சட்டம் 505 மற்றும் 153(A) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

Similar News