விவசாயியைச் சுட்டுக்கொன்ற கால்நடை கடத்தல் கும்பல்!

விவசாயியைச் சுட்டுக்கொன்ற கால்நடை கடத்தல் கும்பல்!

Update: 2021-01-19 19:22 GMT

உத்தரப் பிரதேசத்தில் மெயின்பூர் மாவட்டத்தில் தானா கார்ஹல் பகுதியில் உள்ள ஒரு விவசாயின் வீட்டிற்குள் புகுந்து கால்நடைகளைத் திருட வந்த நபர்களால் விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் மற்றும் அவரது சகோதரர் கல் வீச்சால் காயமடைந்துள்ளார். காவல்துறை பாதிக்கப்பட்டவரின் உறவினரின் அறிக்கைப் படி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

வியாழக்கிழமை அன்று இரவு 12.50 மணியளவில் தானா கார்ஹல் பகுதியில் வசித்து வரும் ராம்நரேஷ் என்பவர் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருக்கும் போது கால்நடை கடத்தல்காரர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். ராம்நரேஷ் மற்றும் அவரது சகோதரர் முன்னே எழுந்து சென்று பார்த்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு கடத்தல்காரரைப் பிடித்து கிராம மக்களை எச்சரிக்கை கத்தியுள்ளனர். தங்கள் கூட்டாளியைக் காப்பாற்ற மற்ற கடத்தல் காரர்கள் அந்த சகோதரர்கள் மேல் கற்களை வீசியுள்ளனர். 
 
அவர்கள் திருடனை விடாமல் இருந்த போது கடத்தல்காரரின் ஒருவன் நாட்டுத் துப்பாக்கி எடுத்து துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளான். ராம்நரேஷ் துப்பாக்கிச் சூடு நேர்ந்ததில் குண்டு பட்டு கீழே விழுந்துள்ளான் மற்றும் அவரது சகோதரனும் தாக்கப்பட்டதால் காயமடைந்துள்ளான். கூட்டாளி மீட்கப்பட்டதும் அனைவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். 

 
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவல்துறை அந்த இடத்திற்கு விரைந்து மற்றும் பாதிக்கப்பட்டவர்களை சைபாய் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தது. துப்பாக்கிச் சூடு பட்டதில் ராம்நரேஷ் உயிரிழந்துள்ளார். காவல்துறை கால்நடை கடத்தல்காரரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. 

Similar News