உ பி: கல்லூரி மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் தேசத்துரோக வழக்குப் பதிவு!

உ பி: கல்லூரி மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் தேசத்துரோக வழக்குப் பதிவு!

Update: 2020-12-28 14:30 GMT

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கல்லூரியில் ஒன்றில் பயிலும் ஆறு மாணவர்கள் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 16 இல் மாணவ சங்க தேர்தலை நடத்தாதலால் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது திங்களன்று கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

காவல்துறையின் புகாரில், சாகேத் பட்டப்படிப்பு கல்லூரியின் முதல்வர் N D பாண்டே, மாணவர்கள் சுதந்திரத்துக்கு எதிராகச் சட்டவிரோத கோஷங்களை எழுப்பினர் என்று கூறினார். மேலும் புகாரில் மாணவர்களின் பெயரையும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் மாணவர்கள் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, அவர்கள் ஊழல் செய்வது மற்றும் மாணவர்களுக்கு எதிராக உள்ளவரிடமிருந்தே சுதந்திரம் கோரியதாகக் கூறியுள்ளனர். 

கல்லூரி முதல்வரின் குற்றச்சாட்டின் பேரில், சுமித் திவாரி, சேஸ் நாராயண பாண்டே, இம்ரான் ஹஷ்மி, சத்விக் பாண்டே, மோஹித் யாதவ் மற்றும் மனோஜ் மிஸ்ரா முதலியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும் அவர்கள் மீது சட்டம் 124 A தேசத்தோராகம், 188, 332, 342, 353 மற்றும் 506 போன்ற இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

"மாணவர்கள் சுதந்திரத்தைப் போராட்டம் மற்றும் வன்முறையால் விரும்பினார் மற்றும் அதற்காக சுதந்திர(ஆசாதி) முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் முழக்கங்களை எழுப்பி வன்முறையை நாட்டில் பரப்ப முயன்றனர். தேசத்தைப் பாதுகாப்பது என்னுடைய கடைமை, அதனால் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தேன்," என்று பாண்டே கூறினார். 

மாணவர்கள் ஊழல் செய்யும் முதல்வர் மற்றும் மாணவர்களுக்கு எதிரான அமைப்பிலிருந்து விடுதலை பெற வேண்டியே சுதந்திர முழக்கங்களை எழுப்பினர் என்றும் கல்லூரியின் முன்னாள் மாணவ சங்கத் தலைவர் அபாஸ் கிருஷ்ண யாதவ் கூறினார். அவர்கள் மாணவ சங்க தேர்தல் நடத்தக் கோரிக்கையை முன்வைத்தே போராட்டம் நடத்தினர் என்று அபாஸ் யாதவ் கூறினார். 

Similar News