உத்தரபிரதேசத்தில் 4.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை அளித்துள்ளோம்: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்தியாவில் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக விளங்குகிறது.

Update: 2021-11-02 12:31 GMT

உத்தரபிரதேச மாநிலத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்தியாவில் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக விளங்குகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளது. மீண்டும் ஆட்சியை பாஜகவே கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறையில் புதிதாக 33 பேருக்கு நியமன ஆணையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகி ஆதித்யநாத் பேசுகையில், 2002 முதல் 2017ம் ஆண்டுகளின் இடையே ஒப்பிடுகையில், 2017ம் ஆண்டுக்கு பின்னர் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல மடங்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. வேலை நியமனம் என்பது யாருடைய பரிந்துரையும் இல்லாமல் வழங்கப்படுகிறது. நியமனத்தில் ஏதாவது தவறுகள் நடந்தால் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.

மேலும், 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த நான்கரை ஆண்டுகளில் நியமனங்களை வெளிப்படையாக நடத்தியுள்ளோம். 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை மாநில அரசின் பல துறைகளில் சுமார் 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily thanthi


Tags:    

Similar News