உ.பி: 75 மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி.! யோகி அரசின் பிரம்மாண்ட திட்டம்.!

உ.பி: 75 மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி.! யோகி அரசின் பிரம்மாண்ட திட்டம்.!

Update: 2021-02-16 12:13 GMT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக அதிரடி திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். தற்போது மாநிலத்தில் மருத்துவத் துறையில் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாநிலத்தில் 75 மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க யோகி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

தற்போது வரை கல்லூரிகள் இல்லாத 16 மாவட்டங்களில் விரைவில் அரசு மற்றும் தனியார் இணைந்து செயல்படும் வகையில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக புதிய கொள்கைகளை உத்தரப் பிரதேச அரசாங்கம் வெளியிடவுள்ளது. 

மாநிலத்தில் சுகாதார வசதிகளை அடிமட்டத்திலிருந்து மேம்படுத்த அரசாங்கம் முயன்று வருகின்றது மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சுகாதார மையங்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கோரக்பூர், ஆக்ரா மற்றும் வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து வசதிகளையும் கூடிய மருத்துவமனையும் அமைக்கப்பட உள்ளது. 

இரண்டு மாதங்களுக்கு முன்பு, மும்பையில் உள்ள உயர்மட்ட தொழிலதிபர்களுடன் உரையாடுகையில், "உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 75 மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தேவைப்படுகின்றன. PPP மாதிரியாக அங்கு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் உள்ளது," என்று முதல்வர் கூறியிருந்தார். 

மாநிலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள் தேவைப்படுகின்றன மற்றும் அதனை அமைக்க முன்வருபவர்களுக்கு மாநில அரசாங்கம் அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். மாநிலம் தற்போது மருத்துவ கல்வி வழங்கும் மையமாக மாற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது. இது மாநிலத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல் நாட்டிற்கு அனைத்து வகையிலும் மருத்துவ வசதிகள் வழங்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது. 

இதற்கு முதற்கட்ட பணியாக கோரக்பூர் மற்றும் ராய் பரேலி பகுதிகளில் AIIMS மருத்துவமனையை அமைத்துள்ளது. கொரோனா தொற்றுநோய் போன்ற காலகட்டத்தில் உதவியளிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனையிலும் லேப் அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசாங்கத்திடம் இருந்து 20 லட்சம் நிதி வழங்க மருத்துவ மற்றும் சுகாதார மையம் கோரிக்கை விடவுள்ளது. 

Similar News