ரூ.1,800 கோடி மதிப்புள்ள ரவுடிகளின் சொத்துக்களை முடக்கிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ! இது தாங்க ரியல் சிக்ஸர் !
உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவர் ரவுடிகளை ஒடுக்குவதற்காக போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரவுடிகளின் ரூ.1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அம்மாநில அரசு முடக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவர் ரவுடிகளை ஒடுக்குவதற்காக போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக உபி மாநில டி.ஜி.பி., பிசாந்த் குமார் கூறியதாவது: கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 43,294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 630 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ரவுடிகளின் அட்டூழியங்களை ஒடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர்கள் முறைகேடாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த ரூ.1,848 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என போலீஸ் டிஜிபி கூறியுள்ளார்.
Source: Dinamalar
Image Courtesy: The Economics Times
https://www.dinamalar.com/news_detail.asp?id=2818021