உபி : கட்டாய மதமாற்றச் சட்டத்தின் கீழ் ஏழு பேர் கைது.!

உபி : கட்டாய மதமாற்றச் சட்டத்தின் கீழ் ஏழு பேர் கைது.!

Update: 2020-12-06 08:00 GMT
கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டாய மதமாற்றக் குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தின் கீழ்,  சித்தாப்பூர்  மாவட்டத்தில் ஒரு வீட்டிலிருந்து இந்து சிறுமியைக் கடத்தியதற்காக ஏழு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. 

இந்த சம்பவம் நவம்பர் 24 இல் நடந்துள்ளது. சிறுமியின் தாயின் கூற்றுப்படி, முக்கிய குற்றவாளியான  ஜாப்ரேலையும் கிராமத்திலிருந்து காணவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நவம்பர் 27 இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

"கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ஏழு குழுக்கள் அமையப்பட்டுள்ளன, விரைவில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படுவான்," என்று காவல்துறை கூடுதல் ஆணையர் ராஜீவ் தீட்சித் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் ஜப்ரேலின் சகோதரர் மற்றும் மைத்துனரும் உள்ளனர் என்றும் அவர் கூறினார். 

உத்தரப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 50,000 வரை அபராதம் விதிக்கப்படுகின்றது. 

Similar News