ராமர் கோவில் கட்டுமானத்திற்கு 30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய துணை முதல்வர்!

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு 30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய துணை முதல்வர்!

Update: 2021-01-26 14:31 GMT
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் கட்டுமானத்திற்காக அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிதிகளைச் சேகரித்து வருகின்றது. இதற்காக அனைத்து தலைவர்களும், பொதுமக்களும் மற்றும் பலரும் தங்கள் திறந்த மனதுடன் நிதிகளை வருகின்றனர்.
தற்போது உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மயூரா தனது 30 மாத சம்பளமான கிட்டத்தட்ட 11 லட்ச ரூபாயை  ராமர் கோவில் கட்டுமானத்திற்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர். துணை முதல்வர் தனது பணத்தை ஸ்ரீ ராம் ஜென்ம பூமியின் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராயிடம் வழங்கினார். 
மயூரா ஸ்ரீ ராம் மந்திர் நிர்மன் சம்பாரன் நிதி நிகழ்வின் கலந்துகொண்டு தனது நிதித் தொகையை வழங்கினார். மேலும் மாநிலத்தில் கோவில் கட்டுமானத்திற்காக அவர் PWD ஊழியர்கள் சார்பாக 1.01 கோடி காசோலையையும் வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய மயூரா தான் முதலில் ஒரு ராமர் பக்தன் அதன் பின்பே துணை முதலமைச்சர் என்று கூறினார். 
"பல எதிர்ப்புகளை தற்போது ராமர் கோவில் கட்டுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்," என்று அவர் கூறினார். கோவிலுக்கு நன்கொடை அளிப்பது யாருக்கும் கட்டாயம் அல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் நிலைமைகளுக்கு ஏற்ப தங்கள் விருப்பங்களுடன் நன்கொடை வழங்கலாம் என்று  தெரிவித்தார்.  மேலும் மயூரா தனது முன்னோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சார்பாக 30 மாத சம்பளத்தை நன்கொடை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். 

Similar News