21 வயது பெண்ணிடம் லவ் ஜிகாத் - ரவி ஷர்மா என்று சொல்லி ஏமாற்றிய வசீம் அன்சாரி!
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூரின் பராதாரி பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் 'ரவி ஷர்மா' என பொய் சொல்லி பழகிய வசீம் அன்சாரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறினார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் 5 ஆண்டுகளாக தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக்கொண்டு, பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . 2017 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 16 வயது இருக்கும். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் சில காரணங்களுக்காக அப்பெண்ணிடம் பழகினார். தன்னை ரவி ஷர்மா என்று அடையாளம் காட்டி பாதிக்கப்பட்டவரிடம் தான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார்.
இருவரும் அடிக்கடி போனில் பேச ஆரம்பித்தனர். திருமணம் செய்துகொள்வதாக கூறி பல ஆண்டுகளாக சிறுமியை பாலியல் ரீதியாக சுரண்டியதாகக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டுதான், பாதிக்கப்பட்ட பெண் பேஸ்புக் மூலம் ரவி உண்மையில் இஸ்ஸத்நகர் பகுதியைச் சேர்ந்த வசீம் அன்சாரி என்பதை தெரிந்துகொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண் எதிர்ப்பு தெரிவித்ததோடு, முழு சம்பவம் குறித்தும் போலீசில் புகார் அளித்ததுடன், குற்றவாளியால் தான் ஏமாற்றப்பட்டதாக கூறினார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அன்சாரி மன்னிப்பு கோரி பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தினார். அவளது அந்தரங்கப் படங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகக் கூறி மிரட்டத் தொடங்கினான். இசத்நகர் போலீசார் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
Inputs From: Opindia