மீண்டும் இரயில் நிலையங்களில் நடைமுறையில் வரவிருக்கும் பாரம்பரிய மூலம் டீ வழங்கும் திட்டம்.!

மீண்டும் இரயில் நிலையங்களில் நடைமுறையில் வரவிருக்கும் பாரம்பரிய மூலம் டீ வழங்கும் திட்டம்.!

Update: 2020-12-12 15:23 GMT
தேசிய போக்குவரத்துகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் பாரம்பரிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள இரயில் நிலையங்களில் டீ வழங்குவதற்கு மண் பாண்டங்களை(குல்ஹாட்களில்) பயன்படுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த மாதம் இறுதியில் ராஜஸ்தான் அல்வார் மாவட்டத்தில் திகாவாரா ரயில் நிலையம் திறப்பு விழாவின் போது கூறினார். இந்த திட்டமானது வேலை வாய்ப்பினை அதிகப்படுத்தினாலும், இதனை மறு சுழற்சி செய்வதன் மூலம் எழும் சுகாதார பிரச்சனையையும் அரசு சமாளிக்க வேண்டும். 

"இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது ஆகும். ஆனால் பெரிய சவாலானது இதனை நிலையாக பேக்கிங் மற்றும் சேவை செய்வது ஆகும். தினசரி வாழ்க்கையில் இந்தியப் பயணிகளால் அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்ளப்படுகின்றது, எனவே இது பியூஸ் கோயலின் சிறந்த நடவடிக்கை," என்று பங்குதாரரான BOD கன்சல்டிங்கின் சவுரப் உபோவேஜா தெரிவித்தார். 

மேலும், "இந்த திட்டத்தின் மூலம் பல வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். இதனை மறு சுழற்சி செய்வதன் மூலம் எழும் சுகாதார பிரச்சனையும் சமாளிப்பதற்கான கவலையும் இருக்கின்றன," என்று உபோவேஜா  மேலும் தெரிவித்தார். 

இந்த திட்டமானது முதலில் 16 வருடங்களுக்கு முன்பு ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவால் தொடங்கப்பெற்றது. தற்போது 400 ரயில் நிலையங்களின் டீ மண் பாண்டத்தில் வழங்கப்படுகின்றது. 

Similar News