UPI பண பரிவர்த்தனை: இந்தியா அடைந்த மற்றொரு சாதனை!

இந்தியா தற்பொழுது 782 கோடி UPI பரிவர்த்தனைகளை செய்து சாதனை படைத்து இருக்கிறது.;

Update: 2023-01-04 03:18 GMT
UPI பண பரிவர்த்தனை: இந்தியா அடைந்த மற்றொரு சாதனை!

2022 டிசம்பர் மாதத்தில் ரூ. 12.8 லட்சம் கோடி மதிப்பில் 782 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் என்ற சாதனையை இந்தியா எட்டியுள்ள நிலையில், யு.பி.ஐ கட்டணமுறை பிரபலமடைந்து வருவதற்கு பிரதமர் மோடியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் பண பரிவர்த்தனை டிஜிட்டல் வழியாக செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது.


நிதி தொழில்நுட்ப வல்லுநரின் தொடர் ட்விட்டர் செய்திகளைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டரில் பகிர்ந்துகொள்ள செய்தி, "யு.பி.ஐ கட்டணமுறையின் புகழை உயர்த்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்கிறேன். டிஜிட்டல் கட்டணமுறைகளை தேர்ந்தெடுத்ததற்காக சக இந்தியர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளுக்கான குறிப்பிடத்தக்க தகவமைப்புத் திறனை இவை உணர்த்தியுள்ளன".


இந்தியாவில் தற்பொழுது பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் மக்கள் தங்களுடைய முழு நம்பிக்கையும் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். முன்பு இருந்த இந்தியர்களின் மனநிலை தற்போது மாறத் தொடங்கிவிட்டு இருக்கிறது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் வெற்றியாகவும் பார்க்க படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News