MP பதவி பறிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி: முடிவுகளை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா?

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், முடிவுகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Update: 2023-03-31 00:45 GMT

காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவருக்கு கொடுக்கப்பட்ட எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவர் மக்களவைக்கு தொடர்ந்து செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் விடாமல் இந்த ஒரு வழக்கை காங்கிரஸ் கட்சியினர் மேல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த இருந்தார்கள். ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் கோர்ட் விதித்த தீர்ப்பையும் தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டால் அவரது பதவி பறிப்பும் ரத்தாகும் என்று காங்கிரஸ் எண்ணி வருகிறது.


ஆனால் தற்போது இந்தியாவில் நடக்கும் முக்கிய முடிவுகள் மற்றும் ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், "நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டமும், நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம். நாங்கள் ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என அவர் கூறியிருக்கிறார்.


மேலும் அவர் கூறுகையில், நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக தான் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு விஷயத்தில் பிரதமர் மோடி மீது மற்றும் மத்திய அரசாங்கத்தின் மீது காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இங்கு பா.ஜ.கவிற்கும், எம். பி பதவி பறிப்பு விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News