உத்தரகாண்ட்: காவல் தடுப்புகள் மீது டிராக்டர்களை இயக்கிய ஆர்பாட்டக்காரர்கள்!

உத்தரகாண்ட்: காவல் தடுப்புகள் மீது டிராக்டர்களை இயக்கிய ஆர்பாட்டக்காரர்கள்!

Update: 2020-12-26 09:42 GMT

விவசாய சட்டங்களுக்கு எதிராகப்  விவசாயிகள் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த ஒரு மாதங்களாகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாய சட்டங்கள் குறித்த நன்மையைக் கூறி மற்றும் இவர்களின் கோரிக்கை குறித்துப் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடை பெற்றும் இவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இவர்கள் எதிர்கார்ச்சிகளால் தவறாக வழிநடத்தப்பட்டு வருகின்றனர் என்றும் பல குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அவ்வாறு போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் தற்போது வன்முறையில் இறங்கியுள்ளனர் . 

தற்போது உத்தரகாந்தில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் காவல்துறையுடன் ஈடுபட்ட மோதல்கள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவமானது உத்தரகண்ட் உதம் சிங் நகர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. 

அந்த வீடியோவில், காவல்துறை பெரிய தடுப்புகள் கொண்டு ஆர்பாட்டக்காரர்களை தடுப்பதைக் காண முடிந்தது. சில காவலதிகாரிகள் அந்த தடுப்புகளைக் கையில் ஏந்தி, டிராக்டர் ஓட்டி வரும் ஆர்பாட்டக்காரர்களிடம் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதைக் காண முடிந்தது. இருப்பினும் ஆபத்தின் விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் சில போராட்டக்காரர்கள் காவல் தடுப்புகள் மீது டிராக்டர்களை ஏத்தினர். 

அதில் அதிர்ச்சி தரும் விதமாக அந்த தடுப்புகள் மீது வாகனம் ஏறிச் சென்ற போது சில காவல்துறையினர் அதன் கீழ் நசுங்கியதையும் காணமுடிந்தது. இருப்பினும் ஓட்டுநர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் தடுப்புகள் முழுமையாக நசுக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து வாகனத்தை நகர்த்தினர். 

கடந்த சில நாட்களாகவே போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளுக்கு காலிஸ்தானிய அமைப்புகளிடமும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த போராட்டக்காரர்களிடம் சில நக்சல், பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் அமைப்புகளிடம் இருந்து இந்திய எதிர்ப்பிற்கான பொருட்களும் காணப்பட்டது. இந்த போராட்டக்காரர்கள் முன்பு நாட்டில் நடத்தப்பட்ட போராட்டம் போல் இல்லாமல், விவசாயிகளிடையே கிளர்ச்சிகளை ஏற்படுத்துகின்றனர். 

Similar News