உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 25 பேரின் உயிரைக் காப்பாற்றிய ஒரு தாயின் தொலைப்பேசி அழைப்பு.!

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 25 பேரின் உயிரைக் காப்பாற்றிய ஒரு தாயின் தொலைப்பேசி அழைப்பு.!

Update: 2021-02-14 17:55 GMT

கடந்த வாரம் உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். இந்த சம்பவத்தன்று ஒரு தாய் தன் மகனுக்கு அச்சமடைந்த செய்த அழைப்பால் அவரது உயிரை மட்டுமல்லாமல் உடன் பணிபுரியும் 25 பேரின் உயிரையும் காப்பாற்ற உதவியுள்ளது. 

தபோவன் பகுதியில் NTPC ஹைட்ரொ பவர் திட்டத்தில் ஓட்டுநராக பணிபுரிவர் விபுல் கைரேனி. இவரது தாய் மங்ஸ்ரீ தேவி, பனிப்பாறை உடைந்து தண்ணீர் விரைந்து வருவதை அவர் கண்டதால் தொடர்ச்சியாக அவரது மகன் விபுலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆரம்பத்தில் விபுல் அவரது அழைப்பை மறுத்துள்ளார். 

முதலில் அவர் கூறுவதை அலட்சியமாக எடுத்துள்ளார் விபுல். "என் தாய் மற்றும் என் மனைவி அனிதா அவர்களின் தொடர்ச்சியாகத் தண்ணீர் அதிகரித்து வருவதாக அறிவுறுத்தியதைத் தொடர்ந்து நானும் என்னுடன் பணிபுரியும் 24 பேரும் படிக்கட்டை நோக்கிச் சென்று எங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டோம். அவர்களின் எச்சரிக்கை எங்கள் அனைவரையும் காப்பாற்றியது," என்று விபுல் கூறியுள்ளார். 
 

அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு உடன் பணிபுரியும் நபர் சந்தீப் லால், தேவியின் அழைப்பு எங்களைக் காப்பாற்றியது என்று கூறியுள்ளார். அந்த அச்ச நிலையை அவர் நினைவு கூர்ந்து, இதிலிருந்து பெற்றோரின் எச்சரிக்கையை அவமதிக்கக் கூடாது என்று கற்றுக்கொண்டதாகக் கூறி நெகிழ்ச்சி அடைந்தார். எங்களுடைய 100 கணக்கான நண்பர்கள் இந்த திடீர் வெள்ளத்தால் காணாமல் போயினர் என்றும் குறிப்பிட்டார். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் பிப்ரவரி 7 இல் பனிப்பாறை உடைந்ததால் ஆற்றுநீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கி வெள்ளப்பெருக்காக மாறியது. இதனால் தபோவன் பகுதியில் மின் திட்டத்தில் பணிபுரிந்து வந்த 100 க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர். மேலும் இது நதிக்கரையில் ஓரத்தில் உள்ள பல வீடுகளையும் சேதம் செய்துள்ளது. 

Similar News