அமெரிக்காவிலுள்ள சாலைகள் போன்று உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்படும் ! அடுத்த 5 ஆண்டுகளுக்கு 5 லட்சம் கோடி நிதி முதலீடு !

Update: 2021-12-26 08:47 GMT

"உத்தரப்பிரதேசத்தில்  அமெரிக்காவில் உள்ள சாலைகளை போன்ற தரத்தில்  சாலைகளை நான் உருவாக்குவேன்"  என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி  அனைவராலும் பாராட்டப்பட்டு  வருகிறது. சட்ட ஒழுங்கு,  சுகாதாரம்,  உள் கட்டமைப்பு என  கடந்த 5 ஆண்டுகளாக உத்தரபிரதேசம் மிளிர்கிறது.    இந்நிலையில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலால் உத்தரபிரதேச அரசியல் சூடுபிடித்துள்ளது.

நாட்டின் முன் மாதிரி மாநிலமாக இருக்கும் உத்தரபிரதேசத்தை  மேலும் மேம்படுத்தும் வகையில் பல வளர்ச்சித் திட்டங்களை  மத்திய அரசு அறிவித்து வருகிறது.

அந்த வகையில்  நேற்று  நிகழ்ச்சி ஒன்றில்  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின் கட்கரி கலந்து கொண்டு  பேசியதாவது: உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க.ஆட்சி அமைந்தால், சாலை திட்டங்களுக்காக மட்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 5 லட்சம் கோடி நிதி முதலீடு செய்யப்படும். அமெரிக்காவில் உள்ள சாலைகளை போன்ற தரத்தில் உத்தரப்பிரதேச சாலைகளை நான் உருவாக்குவேன். 

Maalaimalar

Tags:    

Similar News