100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை ! உலக அரங்கில் சிங்க நடை போடும் மோடி அரசு !

Update: 2021-10-21 05:11 GMT
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை ! உலக அரங்கில் சிங்க நடை போடும் மோடி அரசு !

கொரோனாவுக்கு எதிராக போராடும் இலக்கில், நூறு கோடி தடுப்பூசி செலுத்தி மோடி அரசு  ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

கோவின் இணையதளத்தில் இன்று காலை 9:47 AM மணிக்கு இந்த மைல்கல்லை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா கொரோனா  தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜனவரி 16 2020 அன்று தொடங்கியது. சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, பின்னர் வயதானோர், காவல்துறை ஆய்வாளர்கள் என அடுக்கடுக்காக தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது

மே 1 2020 1 முதல் 18 வயதைத் தாண்டியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது அன்று முதல் தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று   இந்த இமாலய இலக்கை எட்டிய இந்தியாவிற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.

NDTV


Tags:    

Similar News