தடுப்பூசி செலுத்துவதில் அடுத்த சாதனை: மத்திய சுகாதாரத்துறை தகவல்!

Corona vaccination

Update: 2021-07-29 12:53 GMT

இந்தியாவில் பல்வேறு மக்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். குறிப்பாக கிராமப்புறங்களில் கூட தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மத்திய அரசும் தன்னுடைய பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி செலுத்துவதில் மற்றொரு சாதனை படைத்துள்ளது. 


குறிப்பாக இந்தியா முழுவதும் தற்போது வரை சுமார் 45 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இன்று இந்திய முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை, மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.


மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 43,92,697 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 45,07,06,257 தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டப்பபட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக முதல் டோசை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில், இரண்டாம் டோசை பெற்றுக் கொள்வதற்கும் இதே  ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Source: https://www.moneycontrol.com/news/india/covid-19-vaccine-tracker-over-40-lakh-doses-administered-in-india-on-july-27-7236461.html

Images courtesy: Moneycontrol 

Tags:    

Similar News