மத்திய அரசு எடுத்த முயற்சியால் எவ்வளவு சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது தெரியுமா?

Update: 2022-01-08 13:01 GMT

கொரோனா பெருந்தொற்றிலிருந்து  நம்மை தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். தற்பொழுது ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசியின்  முக்கியத்துவம்  மேலும் அதிகரிக்கிறது.


18 வயதைக் கடந்தவர்களுக்கு, நாடு முழுவதும் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் உலக வல்லரசு நாடுகளே வியக்கும் வகையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த வாரம் முதல் சிறார்களுக்கான(15 முதல்18 ) தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. 


நாடு முழுவதும் மத்திய அரசின் முழு முயற்சியால், மாநில அரசுகளின் உதவியுடன் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.


சிறார்களும் அவர்கள் பயிலும் பள்ளிகளில் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்பொழுது எவ்வளவு எண்ணிக்கையிலான சிறார்களுக்கு   தடுப்பூசி செலுத்தப்பட்டது ?  என்ற கேள்வி அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இது குறித்து முக்கிய தகவலை தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் 2 கோடிக்கும் அதிகமான 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மிகுந்த உற்சாகத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News