"தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது ! " மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு !

Update: 2021-11-11 04:27 GMT

"குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும்" மாவட்ட  கலெக்டர் அதிரடி உத்தரவு.

கொரோனா பெருந் தொற்றிலிருந்து  நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி  செலுத்திக்கொள்வது ஒரு மிகப்பெரிய ஆயுதமாக அமைகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசாங்கங்கள் பல யுக்திகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சாமானிய மக்களை தடுப்பூசி செலுத்த வைக்க மஹாராஷ்டிராவிலுள்ள அவுரங்காபாத் கலெக்டர் சுனில் சவானின்  உத்தரவு பேசுபொருளாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள  ரேஷன் க டைகள், சமையல் கியாஸ் ஏஜென்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் தடுப்பூசி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும்.

இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று அவுரங்காபாத் கலெக்டரின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Image : Quint 

Maalaimalar

Similar News