வெவ்வேறு தடுப்பூசிகளின் பயன்பாட்டு ஆய்வு: DCGI அனுமதி !

இந்தியாவில் இரு வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து செலுத்திக் கொள்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள DCGI அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-08-11 13:24 GMT

நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெரும் பங்கு வகித்து வருகிறது. அந்தவகையில் உருமாறும் வைரஸ்களை எதிர்க்கும் விதமாக தடுப்பூசிகளை மாற்றும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் மும்முரம் காட்டுகின்றன. அந்த வகையில் தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்று வைரஸ் எதிர்ப்பு மருந்தாக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு உள்நாட்டு தயாரிப்பு தடுப்பூசிகளும், ஸ்புட்னிக் தடுப்பூசியும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்திய தடுப்பூசிகளை இரு டோஸ்களாக செலுத்தும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. 


அதாவது ஒரு தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் அதே தடுப்பூசியை 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டும். எனவே இரண்டு தவணைகளில் செலுத்தப்படும் தடுப்பூசிகள் ஒரே நிறுவனத்தின் தடுப்பூசிகள் ஆக இருக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை உருமாற்றம் அடையும் கொரோனவைரஸ் மக்களுக்கு எதிராக செயல்படும் ஆற்றலின் சற்று குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. அதனைத்தொடர்ந்து தடுப்பூசிகளை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்துவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 


இதன் மூலம், முதல் தவணையிலும், 2-வது தவணையிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம்(DCGI) இன்று அனுமதி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input: https://www.indiatimes.com/news/india/dcgi-clears-study-on-mixing-covaxin-and-covishield-546962.html

Image courtesy: indiatimes 


Tags:    

Similar News