விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகம்: மத்திய அமைச்சர் உறுதி !

குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் அறிமுகம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-21 13:29 GMT

இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களின் முக்கியமான கவலையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது வரும்? அவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு எப்போது செல்வார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் தான் இருக்கிறார்கள். ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் வெளியிடங்களுக்கு அவ்வளவாக செல்லவில்லை. காரணம் அவர்களுக்கு முன் தோன்றி பரவக்கூடியது அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் அவர்களை வீட்டிற்குள்ளே வைத்துள்ளார்கள். 


ஆனால் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து பேசுகையில், " இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி சென்றடைவது மத்திய அரசு உறுதியாக உள்ளது. மேலும் அவர்களுக்கு 100% தடுப்பூசித் செலுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. 


குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான முடிவுகள் அடுத்த மாதத்தில் தெரியவரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இதனால் குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாகவும் அமைச்சர் மாண்டவியா தெரிவித்தார். ஏற்கனவே இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆய்வு மேற்கொள்ள ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Input:https://m.timesofindia.com/india/government-approves-first-covid-19-vaccine-for-children-above-12-years/amp_articleshow/85492651.cms

Image courtesy:times of India


Tags:    

Similar News