தடுப்பூசியை வீணாக்குவதில் முதலிடம் பிடித்த மாநிலம் இதுதான்.. மத்திய அரசு அறிவிப்பு.!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை பெற்று அதனை மாநில அரசுகளுக்கு இலவசமாக அளித்து வருகிறது.

Update: 2021-06-11 02:57 GMT

இந்நிலையில், பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசியை வீணாக்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. சரியாக பொதுமக்களுக்கு செலுத்தாமல் டோஸ்களை வீணாக்கி வருவது மிகவும் வேதனையாக உள்ளது.

இந்த சம்பவம் மத்திய அரசு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் அதனை மாநில அரசுகள் சரியாக கடைப்பிடிக்காமல் இருப்பதுதான் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில், தேசிய அளவில் தடுப்பூசி டோஸ்களை வீணாக்கும் மாநிலமாக ஜார்கண்ட் மாநிலம் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 33.95 சதவீத டோஸ்கள் வீணாகி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதற்கு அடுத்து சத்தீஸ்கர் 15.79 சதவீதம், மத்திய பிரதேசம் 7.35 சதவீதம் டோஸ்களை வீணாக்கியுள்ளது. இதற்கு அடுத்த படியாக பஞ்சாப் 7.08, டெல்லி 3.95, ராஜஸ்தான் 3.91, மகாராஷ்டிராக 3.59, உத்தரபிரதேசம் 3.78 உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசி டோஸ்கரை வீணாக்கியுள்ளது.

Similar News