லஞ்சம் கொடுத்த வழக்கில் தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை.. டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
லஞ்சம் கொடுத்த வழக்கில் தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை.. டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த புகாரில் விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நாட்டிலேயே அதிகமான தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான வி.வி. மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன் உள்ளார். அது மட்டுமின்றி இவருக்கு ஏராளமான தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அது போன்று சுற்றுச்சூழல் துறைக்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் கொடுத்துள்ளார்.
இந்த வழக்கை சிபிஐ கண்டுப்பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கானது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரி நீரஜ் கட்ரி மற்றும் வைகுண்டராஜன் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று வெளியானது. அப்போது தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவி மினரல்ஸ் ஊழியரான சுப்புலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும், அவரது நிறுவனமான விவி மினரல்ஸ்க்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜாமீன்கோரி வைகுண்டராஜன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவருடைய வயதை கருத்தில்கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.