சொட்டு தண்ணீர் கூட சிந்தாமல் 180 கிலோ மீட்டர் வேகம் - மேக் இன் இந்தியாவின் அடுத்த மைல்கல் வந்தே பாரத் விரைவு ரயில்

வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டமானது 180 km வேகத்தை எட்டி உள்ளது.

Update: 2022-08-28 12:15 GMT

இந்தியா முழுவதும் நரேந்திர மோடி அவர்கள் அதிநவீன விரைவு ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கு அதிகம் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். அந்த வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் திட்டமானது நாடு முழுக்கமும் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் விரைவான பயணங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. பல்வேறு மாநில தலைநகரங்களில் இத்தகைய விரைவு ரயில் திட்டங்கள் ஏற்கனவே கொண்டு வந்து நல்ல வரவேற்பு மக்களிடம் சென்றடைய வேண்டும்.


சென்னையிலும் விரைவில் பாரத் விரைவு ரயில் திட்டம் வருவதற்கான சோதனை கூட்டம் தற்போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தை எட்டியுள்ளது. நவீன அம்சங்கள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் அதிவேகத்தில் செல்லக்கூடிய வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ராஜஸ்தானில் கோட்டா மற்றும் மத்திய பிரதேசத்தின் நாட்டா இரண்டு பகுதிகளுக்கு இடையே இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.


நேற்று நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தில் அந்த ரயில் சுமார் 180 கிலோமீட்டர் வேகத்தை எட்டியது. அதி வேகத்தில் அந்த ரயில் சென்று இப்போது தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி கிளாஸ் வழியாக இருந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News