வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-06 13:15 GMT

வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாரணாசி தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அன்று சங்கட் மோட்சக் கோவிலில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு ஓய்வு அறைக்கு வெளியே மற்றொரு குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் அதேநாளில் தசாஸ்வமேத் காவல் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கிராசிங்கில் தண்டவாளத்தின் அருகே குக்கர் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள வழக்கறிஞர்கள் இந்த வழக்கை விசாரிக்க மறுத்து விட்டனர் பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது.

குற்றவாளிக்கு எதிராக 3 வழக்குகளில் மொத்தம் 121 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர், ஏப்ரல் 2006 இல் குண்டுவெடிப்புகளை விசாரிக்கும் சிறப்பு பணிக்குழு இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வலியுல்லா கான் வங்கதேசத்தை தலைமையிடமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஹர்கத்-உல்-ஜெஹாத் இஸ்லாமி உடன் தொடர்புடையவர் என்றும் குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் தெரிவித்தது.

வாரணாசியில் உள்ள வழக்கறிஞர்கள் அவருக்கு ஆதரவு அளிக்க மறுத்ததால் காசியாபாத்தில் அவரது வழக்குகளின் விசாரணை நடைபெற்றது ஜூன் 4-ஆம் தேதி காசியாபாத் நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

காசியாபாத் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர குமார் சின்ஹா இந்திய தண்டனை சட்டம் ஐ.பி.சி யின்படி கொலை மற்றும் கொலை முயற்சி மற்றும் சிதைத்தல் மற்றும் வெடிபொருள் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது .மரண தண்டனையும் மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.


Source - Asinaet Tamil News

Similar News