இனி இந்திய கப்பல் அருகில் துரும்புகூட நெருங்க முடியாது - தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் குறைந்த தூர ஏவுகணை சோதனை வெற்றி!

Update: 2022-06-24 13:59 GMT

ஒடிசாவின் கடற்கரைக்கு அருகில் செங்குத்தாக செலுத்தும் முறையில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் குறைந்த தூர ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 

ஒடிசாவின் கடற்கரைக்கு அப்பால் சந்திப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய கப்பற்படை கப்பலிலிருந்து செங்குத்தாக செலுத்தும் முறையில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் குறைந்த தூர ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ராடாரில் காணமுடியாத இலக்குகள் உட்பட நெருக்கமான தூரங்களில் ஏற்படும் பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக கப்பலில் பொருத்தப்படுவது விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஆகும்.

வெற்றிகரமான இந்த சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய கப்பற்படை, தொழில் நிறுவனம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். வான் வழி தாக்குதல்களுக்கு எதிராக இந்திய கப்பற்படை கப்பல்களின் பாதுகாப்பு திறனை மேலும் விரிவுப்படுத்துவதற்கான ஒரு சாதனம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Input From: Indian express 

Similar News