இஸ்லாமியர்கள் போராட்டத்துக்கு எதிராக அனுமன் சலிசா பாட அழைத்த விஷ்வ இந்து பரிஷத்!

Update: 2022-06-14 13:41 GMT

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், டெல்லியில் உள்ள அனைத்து கோயில்களிலும் அனுமன் சலிசா பாட வருமாறு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தொலைக்காட்சி விவாதங்களில் இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக பேசியதை தொடர்ந்து நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் பற்றி சில கருத்துக்களை கூறினார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் நுபுர் ஷர்மாவுக்கு இந்துக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இந்துக்கடவுளை அவமதித்தவர்களை அதே பாணியில் பேசியுள்ளார் என்ற ஆதரவுகளை நீட்டி வருகின்றனர். இதனால் இந்துக்கள் மத்தியில் நுபுர் ஷர்மாவுக்கு வரவேற்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த வாரம் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். அதில் பல அரசு பேருந்துகளை சூறையாடினார்கள். இதனால் அம்மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. அரசு சொத்துக்கள் மீது சேதம் விளைவிப்பவர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தக்க பாடம் புகட்டி வருகின்றார்.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் போராட்டங்களுக்கு எதிராக அனைவரும் அனுமன் சலிசா பாட கோயிலுக்கு வருமாறு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது பற்றி அந்த அமைப்பின் டெல்லி மாநில தலைவர் கபில் கன்னா கூறுகையில், ''நுபுர் ஷர்மாவுக்கு எதிரான சட்டவிரோதமான போராட்டங்களை வன்மையாக கண்டிக்கிறேம். எனவே அனைவரும் இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோயில்களுக்கு வந்து அனுமன் சலிசா பாடுங்கள்'' என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு அளித்து கோயில்களுக்கு கூட்டம், கூட்டமாக செல்வதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

Source,Image Courtesy: One India Tamil


Tags:    

Similar News